குறுந்தொகை: பாடல் 277
குறுந்தொகை 277 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-
''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக் கால் வருவது?'' என்றி;
அக் கால் வருவர், எம் காதலோரே.
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது.
ஓரிற் பிச்சையார்
ஆசு - குற்றம்
அமலை - சோற்றுத்திரள்
வெள்இழுது - வெண்ணெய்
அற்சிரம் - பனிக்காலம்
சேமச் செப்பு - காப்புத் திறன் பெற்ற கலம், குடுவை,செப்பு
மறுவில் செய்தி மூவகைக் காலமும்/நெறியின் ஆற்றிய அறிவன்(தொல்.புறத்.நூ.20)
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய(தொல்.கற்பியல்.நூ.12)
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்/
வருவீர் உளீரோ..(குறுந்.118:3-4)
வரை கோள் அறியாச் சொன்றி /நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே(குறுந்.233:6-7)
சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்
