குறுந்தொகை: பாடல் 278
குறுந்தொகை 278 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது.
பேரிசாத்தன்
உறுவளி - மிகுதியான காற்று
உளரிய - கோதிய
மாஅத்து - மா+அத்து (அத்து சாரியை)
முறி - தளிர்
ஊழுறு தீம் கனி - முதிர்ந்த கனி/பழுத்த பழம்
ஓர்ப்பன - ஆராய்தல்/தெரிந்தெடுத்தல்
பார்ப்பு - குட்டி
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப (குறுந்.249:2)
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் (குறுந்.335:4)
