குறுந்தொகை: பாடல் 279

குறுந்தொகை 279 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்

வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,

புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்

இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-

மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்

துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்

இரும் பல் குன்றம் போகி,

திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?

வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை மருதன் இளநாகனார்

திரிமருப்பு - முறுக்கேறிய கொம்பு

மை ஆன் - கரிய நிற எருமை,பசு

மிடறு - கழுத்து

பகுவாய் - பிளந்த வாய்

தெண்மணி - தெளிந்த ஓசை உடைய மணி

புலம்பு - தனிமை

துறுகல் - பொற்றைக் கல்

மாசுஅறக் கழீஇய யானை போலப்/

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் (குறுந்13:1)

மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா

என்அல்லது இல்லை துணை(குறள்.1168)

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்/

யாமத்தும் யானே உளேன்.(குறள்.1167)