குறுந்தொகை: பாடல் 280

குறுந்தொகை 280 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்

நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்

பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்

ஒரு நாள் புணரப் புணரின்,

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.

கழற்றெதிர்மறை

-நக்கீரர்

கேளிர் - அண்மை விளி, கேண்மை உடையீர்

ஆகம் - மேனி

புணரப் புணரின் - கூடக் கூடும்