குறுந்தொகை: பாடல் 281

குறுந்தொகை 281 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்

கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,

அத்த வேம்பின் அமலை வான் பூச்

சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,

குன்று தலைமணந்த கானம்

சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?

பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.

குடவாயிற் கீரத்தன்

பொதுளிய - தழைத்த

பைங்கால் - ஈரத்தன்மை பெற்ற அடிப்பகுதி

கொம்மை -திரட்சி

போந்தை - பனை மரம்

குடுமி - உச்சி

வெண்தோடு - குருத்தோலை

அத்த - வழி

அமலை வான் பூ - வேம்பூங் கொத்து

வான் பூ - தூய மலர்

சுரி - சுருண்ட

உளை - பிடரி மயிர்

தலை - தலைவன் தலை

ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்

போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, (புறம்.265:2-3)

போந்தை வேம்பே ஆரென வரூஉம்/மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்.புறத்.நூ.5)

புறவுக் கரு அன்ன புன் புல வரகின்

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, (புறம்.34:9-10)