குறுந்தொகை: பாடல் 282

குறுந்தொகை 282 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை

நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும்

கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,

நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த

வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்

ஆர் கழல்பு உகுவ போல,

சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே?

வினைவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.

நாகம் போத்தன்

செவ்வி - பருவம்

செஞ்சுவல் - செம்மண் மேடு

கவ்வை - சலசலத்தல்

நவ்வி - மான்

ஆர் - காம்பு

சோர்குவ - சோர்தல்

புறவுக் கரு அன்ன புன் புல வரகின்

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, (புறம்.34:9-10)

கானம் நந்திய செந்நிலப் பெருவழி

வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்

திரி மருப்பு இரலையொடு மடமான் உகள, (முல்லைப்.97-99)