குறுந்தொகை: பாடல் 283
குறுந்தொகை 283 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''உள்ளது சிதைப்போர்'' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்''. என்று, கிழத்தி சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
இரவு (வினை.) -இரத்தல்
வன்மை - வலிமை
அல்கி - தங்கி
செகுத்த - வீழ்த்திய
படுமுடை - தசை, இறைச்சி
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.(குறள்.1066)
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது (குறள்.1041)
அறன் ஈனும் இன்பமும் ஈனும் (குறள்.754)
பொருள் என்னும் பொய்யா விளக்கம் (குறள்.753)
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்/
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே (குறுந்.285:7-8)
