குறுந்தொகை: பாடல் 284

குறுந்தொகை 284 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,

மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்

ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்

அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,

நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-

வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி

கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்

இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.

வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது.

மிளைவேள் தித்தன்

கொன் - பயன் இல்லாத

அவிழும் - விரியும்

வால் வெள் - ஒரு பொருட் பன்மொழி (தூய/வெள்ளிய)

துறுகல் - பொற்றைக் கல்