குறுந்தொகை: பாடல் 285

குறுந்தொகை 285 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வைகா வைகல் வைகவும் வாரார்;

எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;

யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்

சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்

புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு

இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை

ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்

வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பருவம் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது.

பூதத் தேவன்

வைகா -நிலையற்ற, நாள்தோறும்,தினம் தினம்

வைகல் - காலை, விடியற்காலம்,நாள்,நாட்கழிவு

வைக(வினை.) - தங்க,காலநீட்டிப்பு

வைகுதல் - பகல் நேரத்தில்

வைகவும் - பகல் நேரத்திலும்,பகலாக இருக்கும் பொழுதும்

வாரார் - வராத தலைவன்

எல்லா - காத்திருந்த, இதுவரைச் சென்ற எல்லாப் பகற்பொழுதும்

எல்லை - எல்(ஒளி,சூரியன்)+ஐ- ஒளி குறைந்து கொண்டே இருக்கும் பகலின் எல்லை

எல்லோரும்(எல்ல+உம்)

எல்லுதல் - ஒளி மங்குதல்,ஒளி மழுங்குதல்/பகலின் எல்லை, மாலைப்பொழுது

இமைக்கண் - நேரத்துளி,இமைப் பொழுது

பயிரி - மீண்டும் மீண்டும் அழைத்து

உகக்கும் - உயரும்

உகப்பே உயர்தல் உவப்பே உவகை(தொல்.உரி.நூ.8)

வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே

எறி கண் பேதுறல் ஆய் கோடு இட்டுச்

சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க

வருவேம் என்ற பருவம் உதுக்காண் (குறுந்.358:1-4)

வாள்அற்றுப் புற்குஎன்ற கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.(குறள்.1261)

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(குறள்.1269)