குறுந்தொகை: பாடல் 286
குறுந்தொகை 286 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.
இரந்துபின் நின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.
எயிற்றியனார்
அமிழ்தம் - வாயூறல்
கமழ்தல் - பரவுதல்
அகில் ஆரம்(ஆகுபெயர்) - அகிற் புகை, சந்தனப்புகை
அமர் - விருப்பம்
மழைக்கண் - குளிர்ச்சி பொருந்திய கண்
மூரல் - முறுவல், புன்சிரிப்பு
மதைஇய - செருக்குற்ற
அறல் வாழ் கூந்தல் (மலை.304)
அறல் அன்ன இரும்பல் கூந்தல் (அகம்.142:18)
அறல் என நெறிந்த கூந்தல் (அகம்.213:23)
அறல் என அவிர் வரும் கூந்தல் (அகம்.162:10)
அறலின் நெறித்த கூந்தல்(அகம்.265:8)
அறல் மருள் கூந்தல் (அகம்.299:18)
அறல் போல் கூந்தல் (குறுந்.286:3)
தெண் திரை அவிர் அறல் கடுப்ப(மதுரைக்.519)
கதுப்பு அறல்(ஐங்.345:3)
