குறுந்தொகை: பாடல் 287

குறுந்தொகை 287 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

அம்ம வாழி-தோழி-காதலர்

இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-

முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,

விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,

செழும் பல் குன்றம் நோக்கி,

பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, ''நம்மைத் துறந்து வாரார்'' என்று கவன்றாட்கு,பருவம் காட்டி, தோழி, ''வருவர்'' எனச் சொல்லியது,

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

இன்னே - இப்பொழுதே

நிறை - கரு(ஆகுபெயர்)

அசைஇ - தளர்ந்து

ஒதுங்கல் - நடத்தல்

கடுஞ்சூல் - தலைச்சூல்

வானம் - மேகம் (ஆகுபெயர்)

கடுஞ்சூல் மகளிர்(மதுரைக்.609)