குறுந்தொகை: பாடல் 288

குறுந்தொகை 288 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து

குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்

இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற

இன்னாமையினும், இனிதோ-

இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?

தலைமகனது வரவுணர்ந்து, ''நம்பெருமான் நமக்கு அன்பிலன்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கபிலர்

கறி - மிளகு

அடுக்கம் - மலைச் சரிவு

முறி - தளிர்

ஆர்ந்து - அருந்து

ஒருங்கு - ஒன்று கூடி, ஒன்று சேர

இனம் - உறவு

புத்தேள் நாடு - நல்ல நாடு

உயர் நிலை உலகம் (புறம்.249:11,பதி.52:9... ‌‌)

அரும் பெறல் உலகம் (புறம்.62:13,அகம்.213:18)

புத்தேள் உலகம் (மதுரைக்.698)

மறுமை உலகம் (அகம்.66:2)

பெரும் பெயர் உலகம் (குறுந்.83:2)

மேலோர் உலகம் (புறம்.229:22,240:6)

தேவர் உலகம் (புறம்.228:11)

வரையா நிரையம் (குறுந்.292:6)

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;

மிக்க அறமே விழுத்துணை ஆவது( மணிமேகலை, சிறை செய் காதை,137-138)

அறம் எனப் படுவது யாதுஎனக் கேட்பின்/

மறவாதுஇதுகேள் மண் உயிர்க்கு எல்லாம்/

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது/

கண்டது இல்” (மணி. 25: 228-231)

நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்/

அல்லது செய்தோர் அருநரகு அடைதலும்/

(மணி. 16 :88-89)

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.(குறள்.34)

புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.(குறள்.298)

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;(புறம்.192:1)

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறம்.55:10)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்(புறம்.195:6-7)

நன்றி- http ://tamil concordance.in