குறுந்தொகை: பாடல் 289
குறுந்தொகை 289 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
''காலம் கண்டு வேறுபட்டாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''காலத்து வந்திலர்" என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், ''கொடியர்'' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்''என்று, தலைமகள் சொல்லியது
பெருங்கண்ணன்
எவ்வம் - துன்பம்
சாஅய் - மெலிந்து
உழையர் - பக்கத்தில் இருப்போர்
மான்று - மயங்கி
பட்டன்று - பட்டது, பெய்தது
அழுங்குதல் - கலக்கம் எய்தல்
