குறுந்தொகை: பாடல் 290
குறுந்தொகை 290 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
''காமம் தாங்குமதி'' என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,
மெல்லமெல்ல இல்லாகுதுமே.
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
கல்பொருசிறுநுரையார்.
அஃது- காமம்
மதுகையர் - வலிமை மிக்கவர்
கொல் - ஐயப் பொருள் (இடைச்சொல்)
செறி துனி - செறிந்த துன்பம் ,நிறைந்த துன்பம்
மதி,தாம்,ஓ,ஏ - முன்னிலை அசை நிலைகள்
இல் ஆகுதும் - (தன்மைப்பன்மை) இல்லாமல் போகின்றோம்
மியா இக மோ மதி இகும் சின் - முன்னிலை அசைச்சொல் (தொல்.சொல். இடையியல்,நூ.26)
American physical society
http:physics.aps.or
Why sea water is foamy
Sep.8,2023.
Physics.aps.org/ article
சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்
நன்றி: http://tamil concordance.in
