குறுந்தொகை: பாடல் 291

குறுந்தொகை 291 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சுடு புன மருங்கில் கலித்த ஏனற்

படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே

இசையின் இசையா இன் பாணித்தே;

கிளி, ''அவள் விளி'' என, விழல் ஓவாவே;

அது புலந்து அழுத கண்ணே, சாரல்

குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை

வண்டு பயில் பல் இதழ் கலைஇ,

தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.

பாங்கற்கு உரைத்தது.

கபிலர்

சுடு புனம் - வளம்மிக்க புனம்

கலித்தல் - தழைத்தல்

ஏனல் - தினை

கொடிச்சி - குறிஞ்சி நிலத் தலைவி

குளிர் - கிளி கடி கருவி

பாணி - இசைப் பாட்டு

புலந்து - வருந்தி

விழல் - விழுதல்

ஓவாது - ஒழியாமல், இடைவிடாமல்,தொடர்ந்து