குறுந்தொகை: பாடல் 293

குறுந்தொகை 293 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்

பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்

ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்

ஆதி அருமன் மூதூர் அன்ன,

அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை

தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,

வருமே சேயிழை, அந்தில்

கொழுநற் காணிய; அளியேன் யானே!

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கள்ளில் ஆத்திரையன்

கள்ளின் கேளிர் - கள்ளுண்ணச் சேர்ந்து செல்லும் நண்பர்கள்

ஆர்த்திய - ஊட்டிய, அளித்து,கொடுத்து

பாளை - பனம் பாளை

பஞ்சு - நுங்கின் நார்

குறுங்காய் - இள நுங்கு

அருமன் - வள்ளல்

அயம் - பள்ளம்,குளம்

குறங்கு - துடை

நெறித் தழை - பின்னப்பட்ட/கட்டிய தழை

ஊழ் - முறை

மாறு - மாறி மாறி

அலைப்ப - அசைய

அந்தில் - அந்த இடம்

பேணா ஒழுக்கம் (தொல்.கற்.நூ.9:14)

பெற்று நீத்த கிழவன் (தொல்.கற்.நூ.9:27)

யாணர் ஊரன் காணுநன்ஆயின்,/

வரையாமைஓ அரிதே;(நற்.390:7-8)

மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற்.367:6)