குறுந்தொகை: பாடல் 294

குறுந்தொகை 294 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,

தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,

நொதுமலர் போலக் கதுமென வந்து,

முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;

துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்

திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்

தழையினும், உழையின் போகான்;

தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

அஞ்சில் ஆந்தை

தொடலை - மாலை

ஆயம் - விளையாட்டு மகளிர்

தழூஉ அணி - குரவைக் கூத்து

கதுமென - விரைந்து

துத்தி - புள்ளி

பைத்து(பைத்தல்) - விரிதல்

கோடு - பக்கம்

குழைத்தழை - குழைவு உடைய தழை/இளந்தழை

தழையணி அல்குல் மகளிருள்ளும்/

விழவு மேம்பட்ட என் நலனே(குறுந்.125:3-4)

மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி/

அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,/

விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, அகம்.176:13-15

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி,(மதுரைக்.329)

சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ)

சேரி* தொறும் நின்ற குரவை, (மதுரைக்.614 – 615)

*மன்று(பாட வேறுபாடு)

கடலாடு மகளிர் கானல் இழைத்த

சிறுமனைப் புணர்ந்த நட்பே(குறுந்.326:2-3)

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்/

நீராக நீளும்இந் நோய்.(குறள்.1147)