குறுந்தொகை: பாடல் 295
குறுந்தொகை 295 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.
தூங்கலோரி
பெருநலக் குறுமகள் - பெருவளம் பெறக் காரணமான தலைவி
ஓர் ஆன் - ஒரே ஒரு ஆன்(பசு/ எருமை)
வல்சி - உணவு
சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?'' என நோவல் யானே (அகம்.369:22-26)
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை/
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,/
விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ; (நற்.390:4-6).
ஔவையார்
நன்றி: http ://tamil concordance.in
