குறுந்தொகை: பாடல் 296
குறுந்தொகை 296 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-''தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?'' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
பெரும்பாக்கன்
அம்ம - கேட்பித்தல்
வாழி - அசைநிலை
அலங்கு சினை - அசைகின்ற சினை/ கொம்பு/ கிளை
சிறை - சிறகு
உறு - மிகுதி
செறு - வயல் / கழனி
முனையின் - வெறுத்த பொழுது
நயக்கும் - விரும்பும்
