குறுந்தொகை: பாடல் 298
குறுந்தொகை 298 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது.
பரணர்
சேரி - தெரு
அரிது - அருமை
வைகல் - விடியற்காலை
பைதல் - துன்பம்
அகுதை - ஆற்றல் மிக்க பெருவீரன்
வெண் கடைச் சிறுகோல் - வெள்ளிப் பூண்போட்ட தலைக் கோல்
மான - உவம உருபு
பிறிதொன்று - வேறானது
நெடும் புறநிலை - நீண்ட நேரம் புறத்தில்/வெளியில் நிற்றல்
பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம்.348:7)
தேள் கடுப்பன்ன நாட்படு தேடல் (புறம்.392:16)
நறவு மகிழ் இருக்கை (அகம்.97:2)
நறவு உண் மண்டை (அகம்.96:1)
நறவு மலி பாக்கம் (குறுந்.394:2,அகம்.196:1)
நறவு மலி மறுகு (அகம்.126:10)
வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந் தானை/
அகுதை(அகம்.208:17-18)
மறப்போர் அகுதை (புறம்.347:5)
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த/
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு/
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி(அகம்.97:9-11)
வெண்கடைக் கோல் (புறம்.39:2-3)
அகவன் மகளே! அகவன் மகளே!/
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்/
அகவன் மகளே!..(குறுந்.23:1-2)
