குறுந்தொகை: பாடல் 299
குறுந்தொகை 299 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
வெண்மணிப் பூதி
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.(குறள்.1233)
புணரி - அலை
திளைத்தல் - மோதித் தழுவுதல்
இமிழ் - ஆரவாரம்
இணர் - பூங் கொத்து
எக்கர் - இடுமணல்
மன், மற்று, ஏ - அசைநிலைகள்
