குறுந்தொகை: பாடல் 300

குறுந்தொகை 300 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

குவளை நாறும் குவை இருங் கூந்தல்,

ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,

குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன

நுண் பல் தித்தி, மாஅயோயே!

நீயே, ''அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;

யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்

கடல் சூழ் மண்டிலம் பெறினும்,

விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.

சிறைக்குடி ஆந்தையார்

குவளை,ஆம்பல்,தாமரை - மலர்கள் (ஆகுபெயர்)

நாறும் - மணக்கும்

குவை - குவியல்

தேம் - தேன்

கொங்கு - தாது

தித்தி -சுணங்கு

மாயோள்- மாமை நிறம் உடையவள்

மாஅயோயே -விளி

அஞ்சல் -அஞ்சாதே

அஞ்சலையே(அஞ்சல்+ஐ+ஏ) - அஞ்சற்க, அஞ்சாதே

விடல் சூழ்தல் - விடக் கருதுதல்

உரியை- வாழி!என் நெஞ்சே!(நற்.16:1-4)

சிறைக்குடி ஆந்தையார்

.....‌‌.............கரும்பின்/

காலெறி கடிகைக் கண் அயின் றன்ன/

வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்(குறுந்.267:2-4)

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்/

வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய/

வாரேன் வாழிய நெஞ்சே!' (பட்டினப்பாலை.218-220)

பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி

வால்எயிறு ஊறிய நீர்.(குறள்.1121)

…………………..முள் எயிற்று

அமிழ்தம் ஊறும் செவ் வாய்………. (குறுந்.286:1-2)

.......நன்னன் நல் நாட்டு/

ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்/

யாரோ பிரிகிற்பவரே..(நற்.391:6-8)