குறுந்தொகை: பாடல் 303
குறுந்தொகை 303 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
அம்மூவன்
புன்னை அம் புகர் நிழல் (குறுந் .303:6)
கொழு நிழல் (குறுந்.123:1)
தண் நிழல் (குறி.106,பட்டி.204)
இன் நிழல் (குறுந்.5:2)
வரி நிழல் (குறுந்.363:4)
அசை நிழல் (நற்.258:7)
நன்றி : http ://tamil concordance.in
