குறுந்தொகை: பாடல் 304
குறுந்தொகை 304 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கணக்காயன் தத்தன்
கொல்வினை - கொல்லன் தொழில்(பெயர்.)/கொல்லும் தொழில் (வினை.)
எறி உளி - மீன் எறி கருவி
முளி - காய்ந்த
வெதிர் - மூங்கில்
நோன்காழ் - வலிமையான மூங்கில் கழி,கம்பு, கொம்பு
நீர்ச் சுரம் - நீர் வழி
கோட்டு மீன் - சுறா மீன்
தோடு - கூட்டம்
இரிதல் - ஓடுதல், பறத்தல்
கைதை - தாழை மரம்
பகை தரு நட்பு - பிரிதல்,அலர்,இற் செறிப்பு நிறைந்த களவு வாழ்க்கை
