குறுந்தொகை: பாடல் 305
குறுந்தொகை 305 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.
குப்பைக் கோழியார்.
அருங் காட்சியம் - ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை
இடை - இடம்
கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்/
தாம்காட்ட யாம்கண் டது.(குறள்.1171)
கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும்/
இதுநகத் தக்கது உடைத்து.(குறள்.1173)
உடம்பும் உயிரும் வாடிய கண்ணும்/
என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்/
கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை.(தொல்.பொருளியல்.200)
மனை உறை கோழி குறுங் கால் பேடை (குறுந்.139:1)
குக்கூ என்றது கோழி (குறுந். 157:1)
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் (குறுந்.234:4)
குப்பைக் கோழி தனிப் போர் போல (குறுந்.305:6)
கூகைக் கோழி வாகைப் பறந்தலை(குறுந்.393:3)
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.(குறள்.1159)
ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்
குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி
ஒளிப்பினும், காமம் சுடும். (நாலடியார்.90)
