குறுந்தொகை: பாடல் 306

குறுந்தொகை 306 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

''மெல்லிய, இனிய, மேவரு தகுந,

இவை மொழியாம்'' எனச் சொல்லினும், அவை நீ,

மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்

காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்

வண்டு வீழ்பு அயரும் கானல்-

தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது.

அம்மூவன்

மெல்லிய - மென்மை நிறை மொழி

இனிய - கேட்டார்க்கு இன்பம் பயக்கும் மொழி

மேவரு தகுந - விரும்பத் தகுவன

மா அத்து - மா மரம்

தாது - மாம் பூவின் மகரந்தப் பொடி

அமர்(வினை.) - விருப்பம்

அயரும் - மயங்கும்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்

கலத்தல் உறுவது கண்டு.(குறள்.1259)