குறுந்தொகை: பாடல் 307

குறுந்தொகை 307 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,

செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,

இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,

மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்

உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,

நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,

வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,

அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்

அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கடம்பனூர்ச் சாண்டில்யன்

வளை - சங்கு

செவ்வாய் வானம் - சிவந்த வானம்,செக்கர் வானம்

ஐ - விரைவுக் குறிப்பு

உயங்கு நடை - வருந்திய/தளர்ந்த நடை

வருத்தம் - பசி வருத்தம்

நோனாது - பொறுக்காமல்,/ தாங்காமல்

அழுங்கல் - துன்பம்

முழங்கும் - பேர் இரைச்சல் ,பேரொலி

அத்தம் - வழி

1. ஐ - வேற்றுமை உருபு அல்லாப் பெயர்

என்னை - என்+ஐ

2. ஐ - சாரியை/வேற்றுமை உருபு அன்று

அஞ்சலையே - அஞ்சல்+ஐ+ஏ

கணவனை - கணவன்+ஐ

3. ஐ- ஒலிக் குறிப்புச் சொல்

நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும் (குறுந்.261:4)

நள்ளென் யாமத்து ஐ எனத் தோன்றி (குறுந்.307:2)

தொன்று தொழு பிறை(மதுரைக்.193)

பிடி பசி களைஇய பெருங் கை வேழம்/

மென்சினை யாஅம் பொளிக்கும் (குறுந்.37:2-3)

...................‌‌காவலர்/

கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்/

நெஞ்சு புண் உற்ற விழுமத் தானே (261:6-8)

பொழுது அறிந்து அறியும் பொய்யா மாக்கள் (முல்லைப்பாட்டு.55)