குறுந்தொகை: பாடல் 308

குறுந்தொகை 308 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்குதுயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது.

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

சுரி நுகும்பு - சுருண்ட குருத்தோலை

இனைய - வருந்த

நீவல் - தடவல்

மதன் - செருக்கு,வலிமை

மையல் -மயக்கம்

வேழம் - ஆண் யானை

தைவர - கையால் வருடுதல்,தடவுதல்

ஆம் - நீர்

இழி - இறங்குதல்

சிலம்பு - மலை

கை - செய்வது,செய்கை

தாழ்ந்தன்றே - தாழ்ந்தது+அன்று-ஏ

தாழ்ந்தது குறைந்தது

சிலம்பில் போகிய செம் முக வாழை/

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,/

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்(அகம்.302:1-3)

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,

படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,

பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் (அகம்.8:9-11)

*சொலிய - உரசி