குறுந்தொகை: பாடல் 309
குறுந்தொகை 309 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது,
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
உறையூர்ச் சல்லியன் குமாரன்
செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக்/
காணார் முதலொடு போந்தென, பூவே/
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்/
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,/
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்/
பேதை நெய்தல்..(நற்.275:1-6)
கைவினை மாக்கள் - உழவர்
செய்வினை - களை கட்டல்
உண - உண்ண (இடைக்குறை)
கொடியோர் - ஊரார்
செறு - வயல்
இன்னாதன - தலைவியைப் பிரிதல்,பரத்தையரோடு புனலாடல்...
