குறுந்தொகை: பாடல் 310

குறுந்தொகை 310 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;

கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,

நம்மே போலும் மம்மர்த்து ஆகி,

எல்லை கழியப் புல்லென்றன்றே;

இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை

தண்ணிய கமழும் ஞாழல்

தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.

வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.

பெருங்கண்ணன்

மம்மர் - மயக்கம்

.............உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.(குறுந்.28:5-7)