குறுந்தொகை: பாடல் 311

குறுந்தொகை 311 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்

புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,

நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்

யான் கண்டன்றோஇலனே; பானாள்

ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்

தாது சேர் நிகர்மலர் கொய்யும்

ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?

அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

சேந்தன்கீரன்

வலவன் - தேர்ப்பாகன்

கல் - ஒலிக் குறிப்பு

கடுந்தேர் - கடிது ஓடும் தேர்

நிகர் மலர் - ஒளி மலர்

ஆயம் - மகளிர் கூட்டம்

கண்டன்று - கண்டது

ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,/

ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை (குறுந்.262:1-2)

யாய் அறிந்து உணர்க'' என்னார், தீ வாய்/

அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,/

''இன்னள் இனையள், நின் மகள்'' என, பல் நாள்/

எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,(அகம்.203:2-5)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் ஊர்.(குறள்.1150)

புன்னை அம் சேரி இவ் ஊர்

கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. (குறுந்.320:7-8)

அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே (நற்.149:10)

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற்.143:7)

வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சி (குறுந்.373:3)

அம்பல் பெண்டிர் (அகம்.203:3)

......‌.‌‌கொங்கர்/

மணி அரை யாத்து மறுகின் ஆடும்/

உள்ளி விழவின் அன்ன,/

அலர் ஆகின்று,அது பலர் வாய்ப் பட்டே? (அகம்.368:16 -19)

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய். (குறள்.1147)

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் (குறுந். 112:1)

நன்றி - http ://tamil concordance.in