குறுந்தொகை: பாடல் 312

குறுந்தொகை 312 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இரண்டு அறி கள்வி நம் காதலோளே:

முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்

முள்ளூர்க் கானம் நாற வந்து,

நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,

சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,

அமரா முகத்தள் ஆகித்

தமர் ஓரன்னள், வைகறையானே.

இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது.

கபிலர்

இரண்டு - ஒழுக்கம் (இரண்டறிகள்வி)

துப்பு - வலிமை

மலையன்- வள்ளல் (மலையமான் திருமுடிக்காரி)

சாந்து - மயிர்ச் சாந்து

வைகறை - பகற் பொழுது