குறுந்தொகை: பாடல் 313
குறுந்தொகை 313 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, ''பண்பிலர்'' என்று இயற்பழித்த தோழிக்கு, ''அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!'' என்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது
நீத்து நீர் - நீந்துவதற்குக் காரணமான நீர்
இருங் கழி - கரிய கழி
சேக்கும் - தங்கும்,உறையும்
யாத்தேம் - பிணித்தல், கட்டுதல்,நீங்காது இருத்தல்
யாத்தன்று - பொருந்தியது
அவிழ்த்தல் - பிரித்தல்
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே (ஐங். 184:4)
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;/
என்றும் என் தோள் பிரிபு அறியலரே''/
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்/
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,/
புரைய மன்ற, புரையோர் கேண்மை;(நற்.1:1-5)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று;/
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்/
கருங் கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு/
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்.3)
நன்றி - http ://tamil concordance.in and
Dr Kannan Vaithianathan, Wildlife Biologist
