குறுந்தொகை: பாடல் 314
குறுந்தொகை 314 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவம் காட்டி, அழிந்து கூறியது.
பேரிசாத்தன்
சேய் உயர் - ஒரு பொருட் பன்மொழி
கமஞ்சூல் - நிறைவு
தண் குரல் - முழக்கம்
எழிலி - மேகம்,முகில்
ஒண் சுடர் - மின்னல்
இமைப்ப - இமைத்தல்,விளங்குதல்
பெயல் - மழை
தாழ்பு - பெய்து(தாழ்வு)
இன் உறல் - தழுவுதல்
ஞெமுங்க - அழுந்தும்படி
தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென/
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்/
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்/
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!(குறுந்.270:1-4)
நன்றி - http ://tamil concordance.in
