குறுந்தொகை: பாடல் 315

குறுந்தொகை 315 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

எழுதரு மதியம் கடற் கண்டாஅங்கு

ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்

ஞாயிறு அனையன்-தோழி!-

நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.

வரைவிடை, ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மதுரை வேளாதத்தன்

மதியம் - நிலவு, திங்கள்

நெருஞ்சி - முட் செடி

சிறியிலை நெருஞ்சி (குறுந்.202:2)

ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு

நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்

குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி

ஒளிப்பினும், காமம் சுடும். (நாலடியார்.90)

சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல/

என்னொடு திரியான் ஆயின் வென் வேல்/

மாரி அம்பின் மழைத் தோல் சோழர்/

வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை/

ஆரியர் படையின் உடைக என்/

நேர் இறை முன்கை வீங்கிய வளையே (அகம்.336:18-23)

நன்றி - http ://tamil concordance.in