குறுந்தொகை: பாடல் 316
குறுந்தொகை 316 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
வரைவிடை ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
தும்பி சேர் கீரன்
ஆய் - அழகு
ஞெகிழ -தளர/நெகிழ
அயர்வு - இளைப்பு
நிறுப்ப - நிலைக்க
நோய் - பிரிவுத் துன்பம்,காம நோய்
விளியாது - இடைவிடாமல்
உரவு - வலிமை
ஓரை - விளையாட்டு
ஓராங்கு - ஒருசேர
ஆய்ந்த - வருந்திய
துனை பரி - விரைந்து ஓடுதல் (துனை- விரைவு)
மாசு போகப் புனல் படிந்தும் /
அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும் (பட்டினப் பாலை, 100-101)
பொன் வரி அலவன் (குறுந்.303:7)
அலை வாழ் அலவன் (குறுந்.351:2,316:6)
அலவன் சிறு மனை (குறுந்.328:2)
கொடியை வாழி! தும்பி (நற்.277:1)
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் (நற்.239:4)
இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல்/
பொன் வரி அலவன் ... (குறுந்.303:6-7)
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது/
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகள் (நற்.106:3-4)
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்/
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு/
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப/
பைம் தழை சிதையக் கோதை வாட/
நன்னர் மாலை நெருநை நின்னொடு/
சில விளங்கு எல் வளை ஞெகிழ/
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே (நற்.363:4-10)
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்/
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு/
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்/
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்(குறுந்.117:1-4)
ஓரை ஆயம் :
------------------------ குறுந்.48:3,அகம்.219:2
ஓரை மகளிர் :
---------------------------
குறுந்.316:5,401:3
நற். 398:5
கலி.75:4
நன்றி - http ://tamil concordance.in
