குறுந்தொகை: பாடல் 317

குறுந்தொகை 317 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

புரி மட மரையான் கரு நரை நல் ஏறு

தீம் புளி நெல்லி மாந்தி, அயலது

தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,

ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்

நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக

வட புல வாடைக்கு அழி மழை

தென் புலம் படரும் தண் பனி நாளே?

பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

மதுரைக் கண்டரதத்தன்

மாந்தி - தின்று

தேம் - தேன்

அழி மழை - வினைத் தொகை

புலம் - திசை

வட புல(ம்) - வட திசை

தென் புலம் - தென் திசை

ஓம்புமதி வாழியோ வாடை (குறுந்.235:1)

மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை (குறுந்.277:6)

தண் வரல் வாடை (குறுந்.76:5)

தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே (குறுந்.35:5)

பெருந் தண் வாடையும் வாரார் (குறுந்.160:5)

பனி கடி கொண்ட பண்பு இல் வாடை

( அகம். 235:15)

கடிது வந்து இறுத்த கண் இல் வாடை

(அகம்.243:8)

அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை

(அகம். 255:15)

தலை வரம்பு அறியாத தகை வரல் வாடை (அகம்.273:10)

ஆனாது எறிதரும் வாடையொடு)

நோனேன் தோழி என் தனிமையானே(அகம். 294:15-16)

தூஉம் துவலைத் துயர்கூர் வாடையும்/

வாரார் போல்வர் நம் காதலர்/

வாழேன் போல்வல் தோழி யானே(குறுந்.103:4-6)

நன்றி - http ://tamil concordance.in