குறுந்தொகை: பாடல் 318

குறுந்தொகை 318 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,

நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,

வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்

குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று

அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்

பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்

பிழையா வஞ்சினம் செய்த

களவனும், கடவனும், புணைவனும், தானே.

கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

அம்மூவன்

தாஅய் - பரந்து

களத்தினின் - களத்தின்+இன்

அணைஇய - செய்யிய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்

கள்வன் - சொல் தவறியவன்

கடவன் - கடமை‌ நிறைந்தவன்/அறிந்தவன்

புணைவன் - ஒப்புப் பெயர்,புணை போன்று தலைவிக்குத் துணை ஆவான்.

யாரும் இல்லைத் தானே கள்வன்(குறுந்.25:1)

கள்வர் போலக் கொடியன் (குறுந்.28:4)

நள்ளென் கங்குல் கள்வன் போல (நற்.40:10)

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம் /

செய்தான் அக் கள்வன் மகன் (கலி.51:16-17)

நன்றி - http ://tamil concordance.in