குறுந்தொகை: பாடல் 320

குறுந்தொகை 320 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்

இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,

நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,

எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,

நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்

பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்

புன்னை அம் சேரி இவ் ஊர்

கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.

அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.

தும்பிசேர் கீரன்

கோள் மீன் - பரதவர் பிடித்து வந்த மீன்

உணங்கல் - உலர்ந்த மீன்

இறவின் - இறா,இறவு (ஆ குறுகி உகரம் பெற்றது)

வாடல் - வற்றல்

நக்கது - நகுவது

மரீஇய - மருவிய, பொருந்திய, அடைந்த, சேர்ந்த

இணர் - பூங் கொத்து

பொங்கர் - மரக் கிளை

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.(குறள்.1146)