குறுந்தொகை: பாடல் 321

குறுந்தொகை 321 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,

சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,

நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-

மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;

மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,

செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,

மறைத்தற் காலையோ அன்றே;

திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.

தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

சாந்து - சந்தனம்

ஆர் - சந்தன மரம்

ஆர மார்பினன் - சந்தன மாலை அணிந்தவன்

நடு நாள் - நள் இரவு

ஏறு - ஆண்மான்

அட்டு - அழித்து

குழுமும் - முழங்கும் கூடும்

காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்

நொதுமலர் வரையும் பருவம் ஆயினும்

வரைவு எதிர் கொள்ளாது தமர் அவண் மறுப்பினும்

அவன் ஊறு அஞ்சும் காலம் ஆயினும்

அந் நால் இடத்தும் மெய்நாண் ஒரீஇ

அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே.(இ.அ.நூ.29)

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,

உரவுக் களிறு போல் வந்து,இரவுக் கதவு முயறல்

கேளேம் அல்லேம்: கேட்டனெம் - பெரும !(குறுந்.244:1-3)

நள்ளென வந்த நாரில் மாலை,

பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்

'வருவீர் உளீரோ ?'எனவும்,

வாரார் - தோழி! நம் காத லோரே. (குறுந்.118:2-5)

நன்றி - http ://tamil concordance.in