குறுந்தொகை: பாடல் 322

குறுந்தொகை 322 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி

கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,

கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென,

இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,

மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,

மருவின் இனியவும் உளவோ?

செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது.

ஐயூர் முடவன்

அமர் - விரும்பு

ஆமான் - காட்டுப் பசு

குழவி - கன்று

வெரீஇ - அஞ்சி

மரீஇ - மருவி, கலந்து

அவண் - அங்கு

வல்லியாங்கு - வல்லுதல்,வலிமை உடையதாதல்,வன்மை

மருவின் - மருவு - ஒன்றாதல்,கலத்தல்,பொருந்துதல்,தழுவுதல்,நெருங்குதல்,சேருதல்,கிடைத்தல்

ஒல்வாங்கு - ஒன்று (வினை),ஒல்லுதல்,பொருந்துதல்.

களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்/ திங்கள் இரண்டின் அகம்என மொழிப.(இ.அ.நூ.32)

உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்/

என்உற்றனகொல் இவைஎனின் அல்லது/

கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை."(தொல்.பொருளியல்,நூ.8)

நன்றி - http ://tamil concordance.in