குறுந்தொகை: பாடல் 323
குறுந்தொகை 323 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே.
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது.
பதடி வைகலார்
எல்லாம் - தலைவியுடன் வாழாத நாள்
எவனோ - என்ன பயன்(வினா)
பதடி - பதர்,பொக்கு
வைகல் - நாள்
படுமலை - படுமலைப் பாலைப் பண்
எழாஅல் - ஓர் இசைக் கருவி
அஞ்சுவர (அம்+சுவல்) - மேலிடம் (இசையில் கீழ் ஓசை,நடுவண் ஓசை, மேல் ஓசை ஆகிய மூன்றனுள் மேலோசை)
வீழ - பரவ
பசு முகை - அன்றலர்ந்த மலர்
தாது - மகரந்தப் பொடி,மகரந்தத் தூள்
நாறும் - மணக்கும்
பாலை
--------------
1.செம் பாலை,2.படு மலைப் பாலை, 3.செவ்வழிப் பாலை, 4.அரும் பாலை,5.கோடிப் பாலை,6.விளரிப் பாலை, 7.மேற் செம் பாலை
அடியார்க்கு நல்லார் உரை
பாட பேதம்
--------------------
அஞ்சுவர / எடுஞ்சுவர,எழுஞ்சுவர
தோள் அணை/தோள் இணை
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,/
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,/
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;/
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,/
பஞ்சி வெண் திரிச் செஞ் சுடர் நல் இல்/
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ/
அன்னை முயங்கத் துயில் இன்னாதே(குறுந்.353)
பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கள் பதடி எனல்.(குறள்.196)
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு/
எழீஇ அன்ன உறையினை முழவின் (நற்.139:4-5)
நன்றி - http ://tamil concordance.in
