குறுந்தொகை: பாடல் 324
குறுந்தொகை 324 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரா வாராவரைவல்'' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது.
கவைமகன்
கோள் வல் ஏறு - கொல்லும் வலிமை பெற்ற முதலை
ஏறு - ஆண் முதலை
வழி வழக்கு - வழிச் செல்லுதல்
அறுக்கும் - இல்லை ஆக்குதல்
உவக்கும் - மகிழும்
கவை மக - இரட்டைக் குழந்தைகள்
கருங் கல் கான் யாற்று அருஞ் சுழி வழங்கும்/
கராஅம் பேணாய் இரவரின்/
வாழேன் ஐய! மை கூர் பனியே! (நற்.292:7-9)
நன்றி - http ://tamil concordance.in
