குறுந்தொகை: பாடல் 325

குறுந்தொகை 325 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

''சேறும் சேறும்'' என்றலின், பண்டைத் தம்

மாயச் செலவாச் செத்து, ''மருங்கு அற்று

மன்னிக் கழிக'' என்றேனே; அன்னோ!

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?

கருங் கால் வெண் குருகு மேயும்

பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.

பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.

நன்னாகையார்

சேறும் - செல்வேன்

மாயம் - பொய்

செத்து - கருதி

மருங்கு -பக்கம்

அற்று - நீங்கி

மன்னிக் கழிக - நிலையாகக் கழிக

அன்னோ - அந்தோ

ஆசு - பற்றுக் கோடு