குறுந்தொகை: பாடல் 326
குறுந்தொகை 326 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே.
சிறைப்புறம்.
துணைத்த - சேர்த்துக் கட்டப்பட்ட
கோதை - மலர்மாலை
பணை - மூங்கில்
மகளிர் - ஆய மகளிர்
சிறு மனை - சிறு வீடு,சிறிய இல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்/
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்/
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது/
இருந்தனம் ஆக எய்த வந்து/
தட மென் பணைத் தோள் மட நல்லீரே (அகம்.110:6-10)
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(குறள்.1269)
நன்றி - http ://tamil concordance.in
