குறுந்தொகை: பாடல் 327

குறுந்தொகை 327 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்

நயன் இலர் ஆகுதல் நன்று'' என உணர்ந்த

குன்ற நாடன் தன்னினும், நன்றும்

நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!

நம் மனை மட மகள், ''இன்ன மென்மைச்

சாயலள்; அளியள்'' என்னாய்,

வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.

கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.

அம்மூவன்

நயன் - அன்பு

நன்று - பெரிது

நிலை - தன்மை

கழுழ்/கழுலி - வெள்ளம்

சிலம்பு - மலை

புல்லென - பொலிவு அழிய

ஆல்,ஏ - அசை நிலைகள்

ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்/

நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ. (கலி.5:14-15)

நன்றி - http ://tamil concordance.in