குறுந்தொகை: பாடல் 328
குறுந்தொகை 328 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, ''அவர் வரையும் நாள் அணித்து'' எனவும்,''அலர் அஞ்சல்'' எனவும் கூறியது.
பரணர்
ஞாழல் - மரம்
அளை - நண்டு வளை, நண்டு வீடு
பள்ளி - துயிலும் இடம்
அலவன் - நண்டு
புணரி - அலை
குணில் - குறுந்தடி
வாய் -வாய்ந்த
இரங்கும் - முழங்கும்
வேந்தர் - பகை மன்னர் (விச்சியின் பகைவர்)
உறழ் - உவம உருபு
குறும்பூர் - குறும்பர், குறும்பூரில் உள்ள மக்கள் (ஆகுபெயர்)
விளக்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே - கபிலர் (புறம்.200:8)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.(குறள்.1146)
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.(குறள்.1144)
நன்றி - http ://tamil concordance.in
