குறுந்தொகை: பாடல் 329
குறுந்தொகை 329 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, ''யான் ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது.
ஓதலாந்தையார்
வளி - கோடைக் காற்று
ஆர் - காம்பு
உஞற்றல் - உதிர்தல்
கழல்பு - கழன்று
தாஅம் - பரக்கும்,பரவி,தாவி
படர்ந்து - இடையறாது நினைந்து
பிறங்கு (வினை.) - ஒளிர்,உயர்,துலங்கு
இறந்தவர் - கடந்தவர்
அரிது - இன்மை குறித்த சொல், தூங்கவில்லை
நிகர் மலர் - ஒளி மலர்
கணிற்கு - கண்ணிற்கு
பனி - கண்ணீர் (தலைவியின் கண்ணீர்)
நனம் தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (குறுந்.6:3-4)
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே (அகம்.45:19)
நன்றி - http ://tamil concordance.in
