குறுந்தொகை: பாடல் 330

குறுந்தொகை 330 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்

தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட

நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்

பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ

இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்

புன்கண் மாலையும், புலம்பும்,

இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.

கழார்க் கீரன் எயிற்றியன்

போது விரி பகன்றைப் புது மலர் அன்ன/

அகன்று மடி கலிங்கம் உடீஇ (புறம்.393:17-18)

பனித் துறைப் பகன்றைப் பாங்கு உடைத் தெரியல்/

கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி

பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி(அகம்.34:11)

ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி (கலி 72:14)

புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை (புறம் 311:2)

வறன் இல் புலைத்தி எல்லத் தோய்த்த /

புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு, (நற் 90:3-4)

பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய/பூந்துகில்... (அகம் 387:6-7)

நலம் - பெண்மை நலம்

புலைத்தி - வண்ணாத்தி

பசை - கஞ்சி

தலைப் புடை - முதல் ஒலிப்பு

போக்குதல் - முடித்தல்

இல் - இல்லை (இடைக்குறை)

.........‌..‌காழியர்/

கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக்/

களரி பரந்த கல் நெடு மருங்கு (அகம்.89:7-9)

நன்றி - பகன்றை: https://ta.wikipedia.org/ and

http ://tamil concordance.in