குறுந்தொகை: பாடல் 331

குறுந்தொகை 331 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,

ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,

கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்

கடுங்கண் யானைக் கானம் நீந்தி,

இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்

பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன

நல் மா மேனி பசப்ப,

நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.

வாடாப் பிரமந்தன்

கழை - மூங்கில்

திரங்கிய - வற்றி, உலர்ந்த

ஆர் -அரிய

கடறு - காடு

கூட்டுண்ணும்- கொள்ளையிட்ட பொருளைப் பிரித்து உண்ணுதல்

கடுங்கண் - தறுகண் அஞ்சாமை,வீரம்

நீந்தி - கடத்தல்,கடந்து

...................... நம்மினும்

பொருளே காதலர் காதல் (அகம்.53:14-15)

கடுங்கண் யானைக் கானம் (குறுந்.331:4)

கையுடை நன்மா (குறுந்.319:3)

செய் பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர்(நற்.214:8)

நன்றி - http ://tamil concordance.in